வா'சேனை: ஊரடங்கு காலத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 15 April 2020

வா'சேனை: ஊரடங்கு காலத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு


ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள காலப் பகுதியில், வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


குறித்த பகுதிகளில், வர்த்தக நிலையங்கள், வீடுகள், பாடசாலைகள் போன்ற இடங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் பிரதேச மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சனநடமாட்டம் இல்லாத நேரங்களைப் பயன்படுத்தும் திருடர்கள் பெண்கள் அணியும் முழு நீள ஆடைகளை அணிந்து, முகங்களை மறைத்துக் கொண்டு திருடும் காட்சிகள் சீசீடிவிகளில் பதிவாகியுள்ளன.

அண்மையில் ஓட்டமாவடியில், நான்கு வர்த்தக நிலையங்கள் உடைத்து திருடப்பட்டுள்ளதுடன், அதே பகுதியில், வீடு ஒன்றின் கூரையைப் பிரித்து பணங்களை திருடிச் சென்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இச்சம்பவங்கள் தொடர்பில், வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே ஊர்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாப்புப் படையினர்களுக்கு ஒத்துழைப்புககளை வழங்கி குறித்த திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என்று பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment