கிணற்றிலிருந்து இரு பிள்ளைகள் சடலமாக மீட்பு; தந்தை கைது - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 April 2020

கிணற்றிலிருந்து இரு பிள்ளைகள் சடலமாக மீட்பு; தந்தை கைது



கிணற்றிலிருந்து இரு பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவமொன்று இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசித்து வந்த சகோதரனும், சகோதரியும்  கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட  (ஆண் 10 வயது , (பெண் 7 வயது) ஆகிய இருவரும் வெளி மாவட்டத்தில் கல்வி கற்பவர்கள் என்றும் கொரோனா வைரஸ் காரணாமாக விடுமுறையில் வந்தவர்கள் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மரணமடைந்த இரு பிள்ளைகளின் உடல்கள் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தந்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment