கிணற்றில் வீசப்பட்ட குழந்தைகளின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் - sonakar.com

Post Top Ad

Friday, 17 April 2020

கிணற்றில் வீசப்பட்ட குழந்தைகளின் ஜனாஸாக்கள் நல்லடக்கம்



கடந்த (14) செவ்வாய்க்கிழமை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட இரு குழந்தைகளின் ஜனாஸாக்கள் இன்று (17) வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்பட்டைக்கப்பட்டு, ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.



வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசித்து வந்த அஸிமுல் ஹக் (வயது 10), அஸிமுல் தாஹியா (வயது 07) ஆகிய இரண்டு குழந்தைகளுமே தந்தையால் கடந்த செவ்வாய்கிழமை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டனர்.

உயிரிழந்த தினம் இருவரது உடல்களும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டதன் பின்னர், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment