கொட்டிகாவத்தையில் 'கொரோனா' உடல்களை எரிக்க எதிர்ப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 2 April 2020

கொட்டிகாவத்தையில் 'கொரோனா' உடல்களை எரிக்க எதிர்ப்புஇலங்கையில் இதுவரை கொரோனா வைரசுக்கு பலியான மூவரது உடல்களும் கொடிகாவத்தை, உடுமுல்லயில் அமைந்துள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டுள்ள நிலையில் அங்கு கொரோனா பாதிப்புற்று இறந்தவர்களைக் கொண்டு வர வேண்டாம் என பிரதேசத்தில் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


இன்றைய தினம் அங்கு மூன்றாவது நபரின் உடல் கொண்டு செல்வதற்கு முன்பாகவும் கதவினை பூட்டி வைத்து ஒரு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைந்துள்ளதாக அறியமுடிகிறது.

இந்நிலையில் எரியூட்டப்பட்ட பின் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பில்லையென பிரதேச மக்களுக்கு சுகாதார அதிகாரிகள் விளக்கமளித்து சமாதானப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment