ஜனாஸா விவகாரம்: முஸ்லிம் பிரமுகர்கள் குழு - மஹிந்த சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Sunday 12 April 2020

ஜனாஸா விவகாரம்: முஸ்லிம் பிரமுகர்கள் குழு - மஹிந்த சந்திப்பு


கொரோனாவால் மரணிக்கும் அனைத்து உடலங்களையும் எரிப்பதாக கடந்த மார்ச் 31ம் திகதி அரசாங்கம் மேற்கொண்ட தீர்வுக்கமைவாக இதுவரை மூன்று முஸ்லிம்கள் உள்லடங்களாக எழுவரின் உடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.



எனினும், இந்தியா உட்பட உலகின் ஏனைய நாடுகளில் புதைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் புதைப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்கான போராட்டம் தொடர்கிறது. இப்பின்னணியில் இன்றைய தினம் முக்கிய சமூகப் பிரமுகர் குழுவொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்து உரையாடியுள்ளது.

அங்கு சமூகத்தின் உணர்வுகள் மற்றும் சமய எதிர்பார்ப்புகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து நாளைய தினம் சுகாதார அமைச்சர் மற்றும் மருத்துவர்களுடன் விரிவாகக் கலந்துரையாடி முடிவொன்றைக் காணுமாறு பிரதமர் தெரிவித்துள்ளார். இப்பின்னணியில் நாளை திங்கட்கிழமை இதற்கான முயற்சிகள் இடம்பெறும் என அறியமுடிகிறது.

முன்னதாக 15ம் திகதி சந்திப்பதற்கு இணக்கம் காணப்பட்ட போதிலும், அச்சந்திப்பை நாளை நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இக்குழுவில் மஹிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான முஸ்லிம் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முயற்சி கை கூட உங்கள் பிரார்த்தனைகளையும் இணைத்துக் கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment