மறு அறிவித்தல் வரை மதுக் கடைகளை மூட உத்தரவு - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 April 2020

மறு அறிவித்தல் வரை மதுக் கடைகளை மூட உத்தரவு


மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற முன்னறிவிப்போடு நாட்டின் பல பாகங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த நிலையில் அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகளில் நீண்ட வரிசையும் முட்டி மோதலுமாக நேற்றைய தினம் பல சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.



இந்நிலையில் மதுக்கடைகளைத் திறப்பதற்கான அரசின் முடிவு பாரிய விமர்சனத்துக்குள்ளானது. இப்பின்னணியில் தற்போது மறு அறிவித்தல் வரை அனைத்து மதுக்கடைகளையும் மூடி வைக்குமாறு மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment