'வருத்தம்' தெரிவித்த உபுல் ரோஹனவுக்கு அரசியல் அழுத்தம்! - sonakar.com

Post Top Ad

Monday 13 April 2020

'வருத்தம்' தெரிவித்த உபுல் ரோஹனவுக்கு அரசியல் அழுத்தம்!


அத தெரண தொலைக்காட்சியில் கடந்த 10ம் திகதி தான் தெரிவித்த கருத்துக்கள் முஸ்லிம்களை பாதித்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தான் அவ்வாறான நோக்கத்தில் அங்கு அப்படிப் பேசவில்லையெனவும் தெரிவித்திருந்த சுகாதார ஆய்வாளர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன, இன்றைய தினம் இது பற்றிய செய்தி வெகுவாகப் பேசப்பட்டு வந்த நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாக தனது பதிவை நீக்கியுள்ளார்.



ஏப்ரல் 11ம் திகதி மாலை அவர் வெளியிட்டிருந்த கருத்தினை அவரிடம் உறுதி செய்தி விட்டே  சோனகர்.கொம் செய்திக்காகப் பயன்படுத்தியிருந்ததோடு அவரது பதிவின் ஸ்க்ரீன்ஷொட்டையும் பெற்றிருந்தோம். பின்னர், நிர்ப்பந்தத்தினால் அப்பதிவை நீக்கியுள்ள அவர், தன்னைச் சுற்றி ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் அழுத்தத்தினால் நிலை தடுமாறியுள்ளமையை  காணக்கூடியதாக உள்ளது.


இலங்கையில், கொரோனா பரவலுக்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம்களே என்றும் மூன்று முஸ்லிம் ஊர்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஒழுக்கத்துடன் இருந்திருந்தால் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம் தடைப்பட்டிருக்காது என்றும் அத தெரண சோடித்திருந்த கதைக்கு உபுல் ரோஹனவும் சாட்சியாக மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே அவர் அதனை மறுத்து கீழ்க்காணும் வகையில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment