கல்முனை: பள்ளிவாசல் நிதியிலிருந்து 40 லட்ச ரூபா நிதி பகிர்ந்தளிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 9 April 2020

கல்முனை: பள்ளிவாசல் நிதியிலிருந்து 40 லட்ச ரூபா நிதி பகிர்ந்தளிப்பு

https://www.photojoiner.net/image/H5D5kgOE

கொரோனா தொற்று அசாதாரண நிலமையின் காரணமாக கல்முனை பகுதியில் வாழ்வாதார ரீதியாக கஷ்டங்களை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல்களின் நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் நிதி நிவாரணமாக வழங்கப்படவுள்ளது.

இதனை பகிர்ந்தளிக்கும் வைபவம் கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிகளிவாசல்கள் நிர்வாக சபையின் தலைவர் டொக்டர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் இன்று (09) முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன் போது கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் கலந்து கொண்டதுடன்,பள்ளிவாசல்களின் தலைவர் அல்ஹாஜ் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸிஸ் அவர்களினால் உரிய பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேற்படி நிவாரண தொகை கல்முனை பகுதியில் உள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகளினூடாக உரிய பயனாளிகளின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

-M.N.M.Afras

No comments:

Post a Comment