4 மாவட்டங்களைத் தவிர ஏனைய இடங்களில் ஊரடங்கை தளர்த்த முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Friday, 17 April 2020

4 மாவட்டங்களைத் தவிர ஏனைய இடங்களில் ஊரடங்கை தளர்த்த முஸ்தீபு


கொழும்பு - கம்பஹா - புத்தளம் மற்றும் களுத்துறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கை எதிர்வரும் வாரம் முதல் தளர்த்துவதற்கு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.19ம் திகதியோடு இலங்கையில் கொரோனா அபாயம் முடிந்து விடும் என்ற தொனியில் ஏலவே உயர் மட்ட அதிகாரிகள் கருத்து வெளியிட்டு வரும் நிலையில் ஊரடங்கை நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், கடுமையான நிபந்தனைகளுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களும் அபாய வலயத்தில் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment