ஜாஎல பகுதியிலிருந்து மேலும் 32 பேர் முகாமுக்கு! - sonakar.com

Post Top Ad

Monday, 13 April 2020

ஜாஎல பகுதியிலிருந்து மேலும் 32 பேர் முகாமுக்கு!


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த வாகன சாரதியொருவரோடு தொடர்பிலிருந்ததன் பின்னணியில் ஜாஎல பகுதியைச் சேர்ந்த 28 பேரை தனிமைப்பட்டிருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.எனினும், அதை மீறி உலவி வந்த நிலையில் குறித்த நபர்களைக் கைது செய்த கடற்படையினர் அவர்களை முகாமுக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் அதில் அறுவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருந்தது. இப்பின்னணியில், மேலும் இவர்களோடு தொடர்பிலிருந்து 52 பேரை நேற்றைய தினம் ஒலுவில் முகாமுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைத்திருந்த கடற்படையினர் இன்று மேலும் 32 பேரை இவ்வாறு முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆரம்பத்தில்  தனிமைப்படுத்தலை அலட்சியம் செய்து உலவி வந்த நிலையிலேயே குறித்த நபர்களோடு தொடர்பிலிருந்த பலர் இவ்வாறு கட்டாய தனிமைப்படுத்தலுக்காக முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment