தினசரி 3000 பேரை பரிசோதிக்க வேண்டும்: ரணில் - sonakar.com

Post Top Ad

Sunday, 19 April 2020

தினசரி 3000 பேரை பரிசோதிக்க வேண்டும்: ரணில்


நாட்டில் கொரோனா தொற்றுடன் (அதை அறியாமலும்) பல பேர் நடமாடக்கூடும் என்ற சந்தேகம் நிலவுவதால் தினசரி 3000 பேரையாவது பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கிறார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.கடந்த வருடம் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றதன் ஒரு வருட நிறைவு 21ம் திகதி வரவுள்ள நிலையில் அரசாங்கம் நாளை ஊரடங்கை தளர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றுள்ளவர்களை விரைவாகக் கண்டறியும் அளவுக்கு அதிலிருந்து விடுபடும் இலகுவாக அமையும் என விளக்கமளிக்கின்ற ரணில் விக்கிரமசிங்க தினசரி 3000 பேரை பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment