மூவின சமூகங்கள் இணைந்து அக்குறணைக்கு 2 மில்லியன் பெறுமதியான உதவிகள் - sonakar.com

Post Top Ad

Friday, 3 April 2020

மூவின சமூகங்கள் இணைந்து அக்குறணைக்கு 2 மில்லியன் பெறுமதியான உதவிகள்

https://www.photojoiner.net/image/J48odJM8

கண்டி நகரிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள்  ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் காரணமாக முடக்கப்பட்டுள்ள அக்குறணைக்கு 20 இலட்சம் பெறுமதியான உலருணவு வழங்கி வைக்கப்பட்டது.


அக்குறணை தெலும்புகஹவத்தையில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அக்குறணை முற்றாக முடக்கப்பட்மையினால் தமது வருமானங்களை இழந்த  மக்களுக்கு உலருணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

அந்த வகையில் கண்டி பல்லேகலை இராணுவ முகாமின் கட்ளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டாரவின் வேண்டுகோளுக்கு  இணங்க கண்டியிலுள்ள சிங்கள வர்த்தக சங்கம், தமிழ் வர்த்தக சங்கம், முஸ்லிம் வர்த்தக சங்கம் கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம்,  ஸம் ஸம் பவுண்டேசன் ஆகியன இணைந்து பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு 30 இலட்சம்  ரூபா பெறுமதியான உலருணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் அரசி, மா, சீன், பருப்பு மற்றும் சமையலுக்குரிய சில  அத்தியாவசியமான உலருணவுகள் வழங்கி வைக்கபட்டன. இந்த உலருணவுப் பொதிகள் யாவும் இராணுவத்தின் ஆதவுடன் பிரதேச செயலாளர் ஏ. எ;ச். எம். இந்திக குமாரி ஆபேசிங்க ஊடாக விநியோகிக்கப்படவுள்ளது.

கண்டி சிங்கள வர்த்தக சங்கத்தின் தலைவர் மஹிந்த  பஸ்நாயக, கண்டி தமிழ் வர்த்தக சங்கத் தலைவர்  ஸ்ரீதர், செயலாளர் விக்ணேஸ்வரன், முஸ்லிம் வர்த்தக பொதுச் செயலாளர் முஜிபுர்ரஹ்மான், கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனத் தலைவர் கே. ஆர், ஏ. சித்தீக் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி

No comments:

Post a Comment