நாடுகளை மிஞ்சிய நியுயோர்க் நகரம்; 159,937 பேருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Friday, 10 April 2020

நாடுகளை மிஞ்சிய நியுயோர்க் நகரம்; 159,937 பேருக்கு கொரோனா


அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் தீவிரமாக கொரோனா பரவி வருகின்ற நிலையில் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரையில் முன்னணியிலிருந்து நாடுகளையும் பின் தள்ளியுள்ளது.


இச்செய்தி எழுதப்படும் தருவாயில் நியுயோர்க் நகரத்தில் மாத்திரம் 159,937 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள அதேவேளை நேற்றைய தினம் மாத்திரம் 10,000த்துக்கு அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் முழுமையாக 468,895 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் 16,697 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, ஸ்பெயினில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 153,222 என்பதோடு இத்தாலியில் 143,626 ஆகும்.

No comments:

Post a Comment