மார்ச் 12 நாடு திரும்பிய பெண்ணுக்கு 'கொரோனா' தொற்று - sonakar.com

Post Top Ad

Thursday, 16 April 2020

மார்ச் 12 நாடு திரும்பிய பெண்ணுக்கு 'கொரோனா' தொற்று


கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி இந்தியாவிலிருந்து நாடு திரும்பியிருந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றிருப்பது நேற்றைய தினமிரவே கண்டறியப்பட்டுள்ளது.வேறு சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைகள் ஊடாக கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் அவரோடு தொடர்புள்ளவர்களையும் கண்டறியும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே நேற்றிரவோடு கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment