
தென்பகுதி, மித்தெனியவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் 36 வயது நபர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றன.
இன்று பி.பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தி வரும் பொலிசார், மரண நிகழ்வொன்றுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த நபர் மீதே துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
காயமடைந்து எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment