புத்தளம்: பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பிலிருந்தவர்களுக்கு வேண்டுகோள் - sonakar.com

Post Top Ad

Tuesday, 31 March 2020

புத்தளம்: பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பிலிருந்தவர்களுக்கு வேண்டுகோள்


புத்தளத்தில் பத்துப் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய தகவல் இன்று வெளியானதையடுத்து நகரில் வசிக்கும் மக்களிடத்தில் இது பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இந்நிலையில், குறித்த பத்துப் பேருடனும் நேரடியான தொடர்புகளை வைத்திருந்தவர்கள் உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி காரியலாயம் அல்லது நகரபிதா பாயிசினைத் தொடர்பு கொண்டு தமது உண்மை நிலைகைளைத் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஏலவே, புத்தளம் வாழ் மக்கள் பங்கேற்கும் சமூக வலைத்தளக் குழுமங்களில் குறித்த பத்துப் பேரின் பெயர் விபரங்கள் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment