வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பதிவதற்கு காலக் கெடு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 31 March 2020

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பதிவதற்கு காலக் கெடு!


எந்த வெளிநாட்டிலிருந்து மார்ச் மாதம் இலங்கைக்கு வந்திருந்தாலும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் நாளை 1ம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்பாக பதிவு செய்து கொள்ளும்படி அறிவித்துள்ளது பொலிஸ்.இது குறித்து விளக்கமளித்துள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன, இம்மாதம் 16ம் திகதி முதல் இலங்கை வந்த அனைவரது பெயர் பட்டியல் மற்றும் முகவரிகள் இருப்பதாகவும் பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாலேயே கொரோனா பரவல் இடம்பெற்றதாக கருதப்படுகின்ற நிலையில் பெரும்பாலானோர் கண்காணிப்பு மையங்களில் 14 நாட்களைப் பூர்த்தி செய்து வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிட்ட தொகையினர் தவிர்த்து வரும் நிலையில் இது சமூக மட்டத்தில் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக கருதப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment