மட்டு மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு 'ஸ்ப்ரே' - sonakar.com

Post Top Ad

Monday, 30 March 2020

மட்டு மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு 'ஸ்ப்ரே'

https://www.photojoiner.net/image/HoIidB5j

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக வேண்டி கொழும்பு, திருமலை வீதிகள் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் உள்நுழையும் அனைத்து வாகனங்களும் இராணுவத்தினரால் பரிசோதிக்கப்பட்டு கிருமி அழிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை, கோறளைப்பற்று வாழைச்சேனை, வாகரை, கிரான் ஆகிய ஐந்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் இணைந்து இவ் வேலைத்திட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகிறது.

இதில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார கள உத்தியோகத்தர்கள், தெளிகருவி ஊழியர்கள், டெங்கு கட்டுப்பாட்டு கள உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் இணைந்து கிருமி அழிக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாவலடி இராணுவ முகாமுக்கு முன்னால் (29) ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட இத்திட்டம் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது. அத்தோடு இது காலவரையரையின்றி இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment