ACJU மாத்திரம் தீர்மானிக்கும் சக்தியாக இருக்க முடியாது: அலி சப்ரி - sonakar.com

Post Top Ad

Sunday 15 March 2020

ACJU மாத்திரம் தீர்மானிக்கும் சக்தியாக இருக்க முடியாது: அலி சப்ரி



இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்தையும் மார்க்க விடயங்களையும் தீர்மானிக்கும் சக்தியாக தற்போதைய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இருக்க முடியாது என்கிறார் பெரமு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராவார் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி.



கொழும்ப தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஏ.றபீயுத்தீன் ஜமாலி எழுதிய வஹாபிசமா? சூபிசமா? எனும் நூல் வெளியீட்டில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், ஜம்மியத்துல் உலமாவுக்குள் சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

முஸ்லிம் அரசியல் மற்றும் மார்க்கத் தலைமைத்துவத்தை மாற்றியமைத்தாக வேண்டும் என மஹிந்த ராஜபக்ச அணி தெரிவித்து வருவதுடன் ஆட்சி மாற்றத்தின் பின் ஜம்மியத்துல் உலமாவின் வடிவம் மாறும் என அது சார்ந்த நபர்கள் அண்மைக்காலமாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-அஸ்ரப் ஏ சமத்

1 comment:

Unknown said...

A dog baking. He want to demolish Acju as per advice of Rajakasa

Post a Comment