பேருவளையில் 8 பேருக்கு கொரோனா: பன்னில மூடப்பட்டது - sonakar.com

Post Top Ad

Monday, 30 March 2020

பேருவளையில் 8 பேருக்கு கொரோனா: பன்னில மூடப்பட்டது


பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பன்னில கிராமம் கொரோனா பாதிப்பின் பின்னணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.பேருவளை சுகாதார அதிகாரி, வைத்தியர் வருண செனவிரத்னவின் தகவலின் படி நேற்றிரவோடு பேருவளையின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மொத்தமாக எண்மருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மருத்துவரின் தகவல் குறித்து முஸ்லிம் பகுதியைச் சேர்ந்தவர்கள்  'மாத்திரம்' முரண்பாடு வெளியிட்டு வருகின்றமையும் பிரதேசத்தில் நாம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மக்கொன உட்பட ஏனைய சிங்கள கிராமங்களின் தகவலைக் கருத்திற்கொண்டு மருத்துவர் வெளியிட்டிருக்கும் தகவலை ஏற்றுக் கொள்வதாக சமூகப் பிரமுகர்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment