MBS - நெதன்யாஹு சந்திப்பு: சவுதி நிராகரிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 14 February 2020

MBS - நெதன்யாஹு சந்திப்பு: சவுதி நிராகரிப்பு!



சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரும் நிழல் ஆட்சியாளராகவும் கருதப்படும் முஹம்மத் பின் சல்மான் இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவை சந்திக்கவுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்ற நிலையில் சவுதி அரேபியா அதனை நிராகரித்துள்ளது.



இது குறித்து விளக்கமளித்துள்ள சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் பைசால் பின் பர்ஹான், சவுதி அரசு அவ்வாறு எந்தவொரு நிகழ்வையும் ஏற்பாடு செய்யவோ இணங்கவோ இல்லையென தெரிவித்துள்ளார்.

எனினும், வளைகுடா நாடுகள் - இஸ்ரேல் இடையே சமரசத்தை உருவாக்குவதற்கான தீவிர முயற்சிகள் இடம்பெற்று வருவதுடன் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment