மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் கட்டிடம் அபகரிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday 25 February 2020

மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் கட்டிடம் அபகரிப்பு

https://www.photojoiner.net/image/oNLQjePh

மஹர சிறைச்சாலை பகுதியில் கடந்த 100 வருடங்களாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் பள்ளிவாசல் கட்டிடம் சிறைச்சாலை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டு அங்கு பௌத்த சமய வழிபாடுகள் நடாத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



பெப்ரவரி ஐந்தாம் திகதி இக்கட்டிடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு சிறைச்சாலை தலைமையதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமய நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராகம நகர்ப்பகுதியிலும் பள்ளிவாசல் இல்லாத நிலையில் பிரதேச மக்கள் ஜும்மா மற்றும் அன்றாட தொழுகை, ஜனாஸா போன்ற விடயங்களை மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.  ஜனாதிபதியின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் சிறைச்சாலை நிர்வாகம், குறித்த இடம் நீண்ட காலமாக கைவிடப்பட்டிருந்த ஒரு கட்டிடம் என விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ராகமையின் அண்மைய ஜனாஸா நிகழ்வுகளுக்குக் கூட தேவையான கழுவும் கட்டில், சந்தக்கு போன்றவற்றை மாபோல பள்ளிவாசலில் இருந்தே பெற்றுக்கொண்டுள்ளதுடன், ஜனாஸா தொழுகைகள் கூட மையவாடிக்கு அருகிலிருக்கும் பழைய வீட்டிலேயே தொழுவிக்கப்பட்டுள்ளது.


-  ரிஹ்மி ஹக்கீம் / MNS

No comments:

Post a Comment