மைத்ரிக்கு பெயருக்கு ஒரு 'பதவி' மாத்திரமே: ரொஷான் ஆவேசம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 19 February 2020

மைத்ரிக்கு பெயருக்கு ஒரு 'பதவி' மாத்திரமே: ரொஷான் ஆவேசம்!

https://www.photojoiner.net/image/O9Uog5qb

ஸ்ரீலசுக - பெரமுன கூட்டணியில் மைத்ரிபாலவுக்கு வழங்கப்பட்டுள்ளது பெயருக்கு ஒரு பதவியேயன்றி வேறு எந்தப் பயனும் அதில் இல்லையென தெரிவிக்கின்ற ரொஷான் ரணசிங்க, பெரமுனவின் பொலன்நறுவ தலைமை தானேயென தெரிவிக்கிறார்.



எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் மைத்ரிபால சிறிசேன போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ள நிலையில் பொலன்நறுவயின் தலைமைத்துவம் பற்றி பேசப்படுவது குறித்து விசனம் வெளியிட்டுள்ள அவர், மைத்ரிபாலவுக்கு ஏதோ ஒரு பதவி கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர அவர் மாவட்டத்தில் எதையும் செய்யப்போவதில்லையென தெரிவிக்கிறார்.

இதேவேளை, தான் மீண்டும் பிரதான அரசியலில் களமிறங்கி தீர்க்க வேண்டிய பல சிக்கல்கள் இருப்பதாக மைத்ரிபால சிறிசேன தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment