இஷாக் ரஹ்மானிடம் ஒரு கோடி கப்பம்: கேடி 'மரூஸ்' கைது! - sonakar.com

Post Top Ad

Sunday 23 February 2020

இஷாக் ரஹ்மானிடம் ஒரு கோடி கப்பம்: கேடி 'மரூஸ்' கைது!

https://www.photojoiner.net/image/Tl0jaams

சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசியல்வாதிகள், சமூகப் பிரமுகர்களை கடுமையாக விமர்சித்து 'சந்தேகத்தின்' பலன் ஊடாக ஆதரவாளர்களை திரட்டி, பின் அதனூடாக அரசியல்வாதிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த நபர் ரிஸான் மரூஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தொடர்பில் அவதூறு பரப்பும் வீடியோவை வெளியிட்டு, அதனை நீக்குவதற்கு ஒரு கோடி ரூபா குபேரம் பேசிய குறித்த நபர், அதில் ஐந்து லட்ச ரூபாவை முற்பணமாக பெற முயன்ற  நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமிடமும் குறித்த நபர் இதே வழியில் கப்பம் பேரம் பேச முனைந்திருந்த ஆதாரங்கள் வெளியான போதிலும் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. கெக்கிராவயைச் சேர்ந்த குறித்த நபர், கொழும்பில் அரசியல்வாதிகளிடம் தமக்கு வீடொன்றைப் பெற்றுத்தருமாறு தொடர்ந்து நச்சரித்து வருவதோடு தம்மை சந்திக்க மறுப்பவர்கள், நிராகரிப்பவர்கள் வேறும் உதவிகள் செய்ய மறுப்போர் தொடர்பில் இவ்வாறு வீடியோக்களை வெளியிடுவதும் பின்னர் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு அந்த வீடியோவை மறுத்துரைத்து கௌரவத்தைக் காப்பாற்றித்தருவேன் எனக் கூறி பணம் கறக்க முயல்வதும் பல காலமாக தொடர்ந்து வந்திருந்தது.

இந்நிலையில், இஷாக் ரஹ்மான் பொலிஸ் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளமையும் இன்னும் சில பேஸ்புக் ஆசாமிகள் இதே பணியைச் செய்து வருகின்றமையும் குறித்த நபருக்கு மார்ச் மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment