நான் மட்டுமா துரோகி? கருணா கேள்வி! - sonakar.com

Post Top Ad

Sunday, 23 February 2020

நான் மட்டுமா துரோகி? கருணா கேள்வி!


தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மாவை சேனாதிராசாவைத் தவிர அனைவரையும் 'துரோகம்' செய்வதால் சுட்டுக் கொல்லும்படி கட்டளையிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னை ஒரு போதும் துரோகியென சொன்னதில்லையென்கிறார் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன்.



விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவை ஏற்படுத்தி, ஆயிகரக்கணக்கான உறுப்பினர்கள் மற்றும் ஆயுதங்களுடன் வெளியேறிய கருணா அம்மான், ராஜபக்ச அரசிடம் சரணடைந்து, அமைச்சுப் பதவிகள் மற்றும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் பெரும்பாலான புலம்பெயர்ந்த நாடுகள் மற்றும் தமிழர் சிவில் அமைப்புகள் கருணாவைத் தொடர்ந்தும் துரோகியென வர்ணித்து வருகின்றன.

இந்நிலையிலேயே பிரபாகரன் தன்னை ஒரு போதும் துரோகியென சொல்லவில்லையென்கிறார் கருணா.

No comments:

Post a Comment