அரபாநகர் குடும்பஸ்தர் ரயில் மோதி வபாத்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 26 February 2020

அரபாநகர் குடும்பஸ்தர் ரயில் மோதி வபாத்!



மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி அரபாநகர் பகுதியில் வைத்து புகையிரதம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் வபாத்தான சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.



மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணமான புகையிரதத்தில் செவ்வாய்கிழமை இரவு 9.10 மணியளவில் ஓட்டமாவடி அரபாநகர் ஹம்ஸா வீதியைச் சேர்ந்த முகம்மது பௌமி அனீஸ் முகம்மட் (வயது 28) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

வாழைச்சேனை மற்றும் புணாணை புகையிரத நிலையத்திற்கு இடைப்பட்ட ஓட்டமாவடி அரபாநகர் புகையிரத கடவையில் கையடக்கத் தொலைபேசியில் கைத்து கொண்டிருந்த வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-எஸ்.எம்.எம்.முர்ஷித் 

No comments:

Post a Comment