1000 பேருக்கு சவுதியில் பேருந்து சாரதிகளாக தொழில் வாய்ப்பு - sonakar.com

Post Top Ad

Friday 21 February 2020

1000 பேருக்கு சவுதியில் பேருந்து சாரதிகளாக தொழில் வாய்ப்பு


இலங்கையர் ஆயிரம் பேருக்கு சவுதி அரேபியா, பொதுமக்கள் போக்குவரத்து நிறுவனத்தில் பேருந்து சாரதியாகப் பணியாற்ற வாய்ப்பளிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் இரு வருட அனுபவம் உள்ள 45 வயதுக்குட்பட்ட நபர்கள் ஆயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கிறது.

சவுதி நிறுவனத்துக்கும் இலங்கை வெளிநாட்டுப் பணியகத்துக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள குறித்த ஒப்பந்த அடிப்படையில் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு மூன்று வார பயிற்சி, இலவச விமான டிக்கட் மற்றும் உணவு உட்பட வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாகவும் கட்டணம் எதுவுமின்றியே இவ்வாய்ப்பு வழங்கப்படும் எனவும் விரைவில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment