நாங்கள் 'குப்பை' சுமக்கும் நாடில்லை: மலேசியா ஆவேசம்! - sonakar.com

Post Top Ad

Monday 20 January 2020

நாங்கள் 'குப்பை' சுமக்கும் நாடில்லை: மலேசியா ஆவேசம்!



ப்ளாஸ்டிக் இறக்குமதியை சீனா 2018ம் ஆண்டு தடை செய்ததையடுத்து அபிவிருத்தியடைந்த நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் தெற்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளை நோக்கி அனுப்பப்பட்டு வருகிறது.



இந்நிலையில் கடந்த காலிறுதியாண்டில் மாத்திரம் 150 இவ்வகை கன்டைனர்களை தமது நாடு திருப்பியனுப்பியுள்ளதாகவும் தமது நாட்டைக் குப்பைக் களமாக்க நினைப்பவர்கள் கனவில் தான் மிதக்க வேண்டும் எனவும் அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் (43), ஐக்கிய இராச்சியம் (42), அமெரிக்கா (17), கனடா (11) உட்பட இலங்கைக்கும் இவ்வாறு குப்பைக் கன்டைனர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளன. இலங்கை துறைமுகத்தை வந்தடைந்த கன்டைனர்கள் திருப்பியனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை எங்கிருந்து இவ்வகை கன்டைனர்கள் வந்ததோ அங்கேயே திருப்பியனுப்பப்பட்டிருப்பதாகவும் மேலும் 110 கன்டைனர்கள் திருப்பியனுப்பப்படவுள்ளதாகவும் மலேசியா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment