மார்ச் 2ம் திகதியே நாடாளுமன்றை கலைத்துவிட யோசனை - sonakar.com

Post Top Ad

Saturday 18 January 2020

மார்ச் 2ம் திகதியே நாடாளுமன்றை கலைத்துவிட யோசனை


19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக நாடாளுமன்றின் பதவிக்காலம் நான்கரை வருடம் முடிவுறும் கையோடு மார்ச் மாதம் 2ம் திகதி நாடாளுமன்றைக் கலைத்து விட ஜனாதிபதி நடவடிக்கையெடுத்து வருவதாக பெரமுன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஜனாதிபதி தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நிலவும் ஆதரவு அலையைத் தக்க வைத்துக் கொள்ளும் நிமித்தம் தேர்தலை விரைவாக நடாத்தியாக வேண்டும் என பெரமுனவில் கருத்து நிலவுகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினர் 2015ல் நாடாளுமன்ற தேர்தலை வெற்றி பெற்றி பெற்றிருந்த போதிலும் ஏனைய தேர்தல்களைத் தொடர்ந்தும் இழுபறிக்குள்ளாக்கி வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது. இப்பின்னணியில் மார்ச் 2ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் இறுதிக்குள் பொதுத் தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment