அயோத்தியில் ராமர் கோயில்; பள்ளிவாசலுக்கு வேறு இடம்! - sonakar.com

Post Top Ad

Saturday 9 November 2019

அயோத்தியில் ராமர் கோயில்; பள்ளிவாசலுக்கு வேறு இடம்!


இந்தியாவில் அண்மைக்கால வரலாற்றில் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளின் உச்ச கட்டமாகக் கணிக்கப்பட்டது பாபர் மஸ்ஜித் இடிப்பு விவகாரம். தொடர்ந்தும் குறித்த இடத்தில் இராமர் கோயில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம் இன்று அதற்கு சார்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது.



இதனடிப்படையில், பாபர் மஸ்ஜித் வெற்று நிலம் ஒன்றில் கட்டியெழுப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லையெனவும் குறித்த இடத்தில் இராமர் கோயில் ஒன்றை நிறுவலாம் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை, முஸ்லிம்களுக்கு மாற்றீடாக 5 ஏக்கர் நிலத்தை வழங்கி, அங்கு பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியெழுப்ப அனுமதிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment