கருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன - sonakar.com

Post Top Ad

Friday 15 November 2019

கருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன



விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து செயற்படுவதாக தெரிவித்த காணொளியை நாம் நேற்று வெளியிட்டிருந்தோம்.



இந்நிலையில், பல முனைகளிலிருந்தும் கருணாவுக்கு கண்டனம் குவிந்து வருவதோடு கட்சி மட்டத்தில் பதற்றம் நிலவிவருவதாக அறியமுடிகிறது. இதன் ஒரு அங்கமாக இன்று காலை தேர்தல் ஆணையாளரிடம் நேரடியாகச் சென்று குறித்த காணொளியை நீக்குவதற்கு உதவுமாறு பொதுஜன பெரமுனவினர் அழுத்தம் பிரயோகித்துள்ளனர்.

இப்பின்னணியில் பேஸ்புக் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழு, இதற்கான கோரிக்கையை முன் வைத்துள்ளது. ஆயினும், குறித்த காணொளியை நீக்க முடியாது என பேஸ்புக் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததையடுத்து, தேர்தல் முடியும் வரை அதனை இலங்கையில் பார்வையிடுவதைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில், இதற்கிணங்கிய பேஸ்புக் நிறுவனம் குறித்த காணொளி இலங்கையில் பார்வையிடாதவாறு தடுக்கப்படுவதாக எமக்கு அறிவித்திருந்தது. ஆயினும், குறித்த காணொளியானது ஒரு தனி நபரால் தானாகவே முன் வந்து பேசப்பட்ட விடயம் என்பதுடன், இப்பேச்சினை மக்கள் பார்வையிடுவதைற்குத் தடை விதிப்பதானது ஏனைய 34 வேட்பாளர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியென எமது தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, காணொளியின் தடையை நீக்குவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

குறித்த காணொளியில், கருணா அம்மான் என அறியப்படும் குறித்த நபர் தான் கோட்டாவை ஆதரிப்பதற்கான காரணம் என்னவென விபரிக்கையில், முஸ்லிம் சக்திகளை அடககுவதே நோக்கம் என தெரிவித்துள்ளமையும் அதுவே தமக்கிடையிலான ஒப்பந்தம் எனும் தொனியில் கருத்து வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Facebook நிறுவனம் சோனகர்.கொம்முக்கு அனுப்பியிருந்த அறிவித்தல்:

Access to your video has been temporarily restricted within Sri Lanka because Facebook has been advised by the Election Commission of Sri Lanka that it does not comply with applicable electoral laws. Your video will be made available on or after 2019-11-16 18:29:39 PST as allowed by applicable law.
If you have any questions, please contact the Election Commission of Sri Lanka for further information.



Alternative viewing option:


No comments:

Post a Comment