சம்பிக்கவுக்கு பிரதமர் பதவியா? சஜித் விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 7 November 2019

சம்பிக்கவுக்கு பிரதமர் பதவியா? சஜித் விளக்கம்!சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும் பிரதமர் யார்? என்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருவதோடு அது சம்பிக்க ரணவக்கவே என முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சாரமும் செய்து வருகின்றன.இந்நிலையில், அக்கேள்விக்கு பதிலளித்துள்ளார் புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.

தான் ஜனாதிபதியானாலும் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடிய ஒருவரே பிரதமர் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த வருடம் ஒக்டோபரிலும் தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டிருந்த பிரதமர் பதவியை, நாடாளுமன்ற பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டதோடு நீதிமன்றம் ஊடாக ரணில் விக்கிரமசிங்க மீளப் பெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a comment