துண்டுப் பிரசுரம் விநியோகித்த நபர் மீது பெரமுன தாக்குதல்! - sonakar.com

Post Top Ad

Sunday, 10 November 2019

துண்டுப் பிரசுரம் விநியோகித்த நபர் மீது பெரமுன தாக்குதல்!நுகேகொட, மீரிஹன பகுதயில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தோடு இணைத்து கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிராக அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் இருந்ததாகக் கூறி பெரமுன உறுப்பினர்கள் துண்டுப் பிரசுரம் விநியோகித்த வயோதிபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிராக வட்ஸ்அப்பில் உலவும் தகவல் ஒன்றை அச்சிட்டு இவ்வாறு வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டே குறித்த வயோதிபர் மீது கோட்டாபே ஆதரவாளர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அரை மணி நேரத்துக்குப் பின்னர் அங்கு வந்த பொலிசார் தாக்குதலுக்குள்ளான நபரை கைது செய்து சற்று நேரம் தடுத்து வைத்திருந்த அதேவேளை பெரமுனவினர் சட்டத்தைக் கையிலெடுத்து இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவின் இணைப்புச் செயலாளர் ஒருவரே இவ்வாறான துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டுள்ளதாக பெரமுனவினர் தெரிவிக்கின்றமையும் ஹர்ஷ அதனை மறுதலித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment