ரிசாத் மன்னாரில் - ஹக்கீம் கொழும்பில்! - sonakar.com

Post Top Ad

Saturday, 16 November 2019

ரிசாத் மன்னாரில் - ஹக்கீம் கொழும்பில்!இதுவரை பாரிய அசம்பாவிதங்கள் எதுவுமின்றி வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில்  அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டு வருகின்றனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், கொழும்பு 3 மெதடிஸ்த கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ள அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் மன்னார் தாராபுரம் அல் மினா மகா வித்தியாலய வாக்குச்சாவடியில் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் பரவலான வாக்களிப்பு இடம்பெற்று வருகின்ற அதேவேளை மன்னாருக்கு வாக்களிப்புக்காக சென்று கொண்டிருந்த வாக்காளர்களின் பேருந்துகள் மீது தாக்குதல் இடம்பெற்றிருந்தமையும் இந்நிலையிலும் 45 வீதத்துக்கு அதிகமான வாக்களிப்பு மதியம் வரை பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment