அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் வெற்றிகரமான முள்ளந்தண்டு சிகிச்சை - sonakar.com

Post Top Ad

Thursday, 10 October 2019

அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் வெற்றிகரமான முள்ளந்தண்டு சிகிச்சை


கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் முள்ளந்தண்டு தொடர்பான சத்திர சிகிச்சையொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.முள்ளந்தண்டு நாரி எலும்பு இடைத்தட்டு சத்திர சிகிச்சை(LAMINECTOMY) யே இவ்வாறு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப் .ரகுமான் அவர்களின் வழிகாட்டலில் வைத்தியசாலையின் எலும்பு முறிவு  சத்திரசிகிச்சை  நிபுணர்  வைத்தியர் கே.காண்டீபன் அவர்களின் தலைமையிலான வைத்திய குழுவினர் இன்று (10) இச் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக  மேற்க்கொண்டனர்.

இவ் வைத்தியசாலையின் வரலாற்றில் முதன் முறையாக இச்  சத்திர சிகிச்சை   மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-எம்.என்.எம்.அப்ராஸ்

No comments:

Post a comment