வியாழேந்திரனும் கோட்டா அணியில்! - sonakar.com

Post Top Ad

Monday, 14 October 2019

வியாழேந்திரனும் கோட்டா அணியில்!


சிறுபான்மை சமூகங்கள் இணைந்து வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை, தனிச்சிங்கள வாக்குகள் போதும் என கோட்டாபே ராஜபக்சவின் பிரச்சாரக் குழு முக்கியஸ்தர் கம்மன்பில போன்றோர் தெரிவித்து வரும் நிலையில் ஹிஸ்புல்லாஹ், ரதன தேரர், கருணா அம்மான் வரிசையில் வியாழேந்திரனும் கோட்டாபே அணியில் இணைந்துள்ளார்.தமிழரசுக் கட்சியூடாக நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன் கடந்த ஒக்டோபரில் மஹிந்த தரப்புக்குத் தாவியதோடு தீவிரமாக முஸ்லிம் விரோத இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அண்மைக்காலமாக ரதன தேரருடனும் நெருங்கிய நட்டைபப் பேணி வரும் வியாழேந்திரன் தன்னை கோட்டா ஆதரவாளராக வெளிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment