கொழும்பு கழிவுகளை கொண்டு செல்வது இடை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Wednesday 16 October 2019

கொழும்பு கழிவுகளை கொண்டு செல்வது இடை நிறுத்தம்


கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை அறுவைக்காடு கழிவகற்றல் பிரிவில் கொட்டும் செயற்பாட்டை  (16) புதன்கிழமை முதல் இடை நிறுத்தியுள்ளதாக, பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.



அறுவைக்காடு கழிவகற்றல் பிரிவு தொடர்பில் கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவினால் விடுக்கப்பட்ட அறிவித்தல் காரணமாக, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு  தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்மானம் தொடர்பில், மாநகர மேயருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறுவைக்காடு கழிவகற்றல் பிரிவில் குப்பைகளைக் கொட்டும் செயற்பாடு தோல்விகரமான திட்டம் என, கொழும்பு மாநகர மேயர் அண்மையில் பத்திரிகையொன்றுக்குக் கருத்துத் தெரிவித்ததாகவும், பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு மேற்கொள்ளக் கூடிய உச்சபட்ச நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுத்துள்ளதாக,  அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டிய கழிவகற்றல் பிரிவை மூடிய பின்னர், கொழும்பு குப்பைகளை அப்புறப்படுத்துவதற்குக் காணப்பட்ட ஒரே தீர்வு, அறுவைக்காடு கழிவகற்றல் திட்டமே எனவும் அவர் மேலும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment