தீவிரவாதம் வேறு - ஏனைய இனங்களை அடக்கியொடுக்குவது வேறு: சஜித் - sonakar.com

Post Top Ad

Friday, 18 October 2019

தீவிரவாதம் வேறு - ஏனைய இனங்களை அடக்கியொடுக்குவது வேறு: சஜித்


தீவிரவாதத்தை அழிப்பது எனும் பெயரில் ஏனைய இனங்களை, மதம் சார்ந்தோரை அழிக்கும் செயலில் தாம் ஒரு போதும் ஈடுபடப் போவதில்லையென தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச.தம்புத்தேகமவில் இடம்பெற்ற பிரச்சாரத்தின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், தாம் கட்டியெழுப்பவுள்ள புதிய தேசத்தில் இன-மத பிரிவினை வாதங்களுக்குத் தாம் இடமளிக்கப் போவதில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி - சுதந்திரக் கட்சி கூட்டாட்சியின் பலவீனமான சூழ்நிலையில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்க எதிரான வன்முறைகள் இடம்பெற்று வந்த அதேவேளை கோட்டாவை ஆதரித்தாலேயே முஸ்லிம்கள் நிம்மியாக வாழ வேண்டும் என பெரமுன தரப்பு அரசியல்வாதிகள் மிரட்டல் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment