கோட்டாவின் 'வரிச் சலுகை' நடக்காத கதை: சம்பிக்க! - sonakar.com

Post Top Ad

Thursday, 17 October 2019

கோட்டாவின் 'வரிச் சலுகை' நடக்காத கதை: சம்பிக்க!


தான் ஜனாதிபதியானால் பெறுமதி சேர் வரி மற்றும் ஏனைய பல வரிகளைக் குறைக்கப் போவதாக கோட்டாபே போலிப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.


இன்றைய தினம் குளியாபிட்டியிலும் இவ்வாறே வரிக்குறைப்புகளை கோட்டாபே அறிவித்திருந்தார். எனினும், தான் என்ன பேசுகிறோம் என்ற புத்தி சுயாதீனமற்ற வகையில் கோட்டாபே பொய் சொல்வதாக சம்பிக்க சாடியுள்ளார்.

போதாதற்கு விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கப் போவதாகவும் கோட்டா தெரிவிப்பதாகவும் அவ்வாறு ஒன்று சாத்தியமாக வேண்டுமானால் அதற்கென மாத்திரம் 35 பில்லியன் ரூபா ஒதுக்க நேரிடும் எனவும் சம்பிக்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment