2015ன் பிழையைத் திருத்திக்கொள்ள மக்கள் காத்திருக்கிறார்கள்: டிலான் - sonakar.com

Post Top Ad

Saturday, 12 October 2019

2015ன் பிழையைத் திருத்திக்கொள்ள மக்கள் காத்திருக்கிறார்கள்: டிலான்


2015 ஜனாதிபதி தேர்தலில் செய்த பிழையைத் திருத்திக் கொள்ள மக்கள் காத்திருக்கிறார்கள் என தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை நம்பி மைத்ரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தது எத்தனை தவறு என்பதை மக்கள் தற்போது உணர்ந்திருப்பதாக தெரிவிக்கும் அவர் அதற்கு  எதிர்வரும் 16ம் திகதி மக்கள் பிராயச்சித்தம் தேடிக்கொள்வார்கள் என தெரிவிக்கிறார்.

இதேவேளை, ஹிஸ்புல்லாஹ்வுக்கு காத்தான்குடியில் அடிப்படைவாதிகளின் ஆதரவே இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமையும் அந்த வாக்குகளை கோட்டாபேவுக்கு ஆதரவாக மாற்றிக்கொள்ளவுள்ளதாக ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment