நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு வெண்கலப் பதக்கம் - sonakar.com

Post Top Ad

Monday 9 September 2019

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு வெண்கலப் பதக்கம்


அகில இலங்கை ரீதியான தேசிய மட்ட தமிழ்த்தின விவாத போட்டியில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள் வெண்கலப்பதக்கத்தினை தமதாக்கிக் கொண்டனர்.



இது அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் வரலாற்றில் தேசிய மட்ட விவாதப் போட்டியில் பெற்றுக் கொண்ட முதல் வெற்றிப்பதக்கமாகும்.

இதற்கு முன்னர் மாகாண மட்டத்தில் 1994/95ம் ஆண்டு எமது பாடசாலை அணி ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்தில் தங்கப்பதக்கம் வென்று தேசிய மட்டப்போட்டிகளில் கலந்துகொண்டது ஆனால் அங்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அந்த அணியில் தற்போது நீதிபதியாக கடமையாற்றும் AMM. ரியால் அவர்களும் வைத்தியர் MYM. மாஹிர் மற்றும் நிர்வாக முகாமையாளராக உள்ள ஆதம்லெப்பை முகம்மது பாரிஸ் ஆகியோர் ஓய்வுபெற்ற ஆசான் KL. நூர்முகம்மது அவர்களின் பயிற்றுவிப்பில் கலந்துகொண்டனர். 

25 வருடங்களின் பின்னர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை அணி மாகாண மட்டத்தில் வெற்றியீட்டி தேசிய மட்டத்தற்கு தெரிவானது. 08.09.2019 கொழும்பு, கல்வி அமைச்சில் இடம்பெற்ற தேசிய மட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டியுள்ளது. மாஷாஅழ்ழாஹ்.

இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களான 
AL. முஷ்பிர் அகமட், 
MA. ஆகாஷ் அகமட்
MN. ஹஸன் அக்தர் 

பயிற்றுவித்த ஆசிரியரான YM. அஷ்ரப் அவர்களுக்கும் மனமார்ந்த  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு இதற்கு உதவிய அதிபர் A. அப்துல் கபூர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியோருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

-OBA

No comments:

Post a Comment