பேரம் தான் பேசுகிறேன்: சிங்களவர்களுடன் சேரவில்லை: வியாழேந்திரன் - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 September 2019

பேரம் தான் பேசுகிறேன்: சிங்களவர்களுடன் சேரவில்லை: வியாழேந்திரன்


சிங்கள சக்திகளுடன் தான் தமது இனத்துக்காக 'பேரம்' பேசும் அரசியலே நடாத்திக் கொண்டிருப்பதாகவும் சிங்களவர்களுடன் சேர்ந்து பயணிக்கவில்லையெனவும் தெரிவிக்கிறார் வியாழேந்திரன்.வியாழேந்திரனின் இனவாத சகாக்கள் நேற்றைய தினம் நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகத்துக்குள் நீதி மன்ற தீர்ப்பையும் மீறி பிக்கு ஒருவரின் உடலைத் தகனம் செய்ததன் பின்னணியில் முல்லைத்தீவில் இன்று மக்கள் போராட்டம் இடம்பெற்றதோடு கல்முனையிலும் சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், தமது இனவாத சகாக்களின் கைங்கரியத்தை கண்டும் காணாததும் போன்று அமைதியாக இருந்த வியாழேந்திரன் இன்று கேள்விக்கணைகள் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு ஒரு அறிக்கை வெளியிட்டு தன்நிலை விளக்கமளித்துள்ளதுடன் தான் இன்னும் சிங்களவர்களுக்கு அடிமையாகவில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment