ஜனாதிபதி பதவி முக்கியமில்லை; ஜனநாயகத்தை காப்பாற்ற அர்ப்பணிப்பு: கரு - sonakar.com

Post Top Ad

Tuesday, 17 September 2019

ஜனாதிபதி பதவி முக்கியமில்லை; ஜனநாயகத்தை காப்பாற்ற அர்ப்பணிப்பு: கரு

ooeTMxH

ஜனாதிபதி தேர்தல் எதிர்பார்க்கப்படும் நிலையில் தன்னை வேட்பாளராக்க முனையும் அதேவேளை அழைப்பு விடுக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, தன்னைப் பொறுத்தவரை இப்பதவியை விட ஜனநாயக்கத்தை காப்பதே அரிய பணியெனவும் அர்ப்பணிப்புடன் செயற்படவே தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க 1995ம் ஆண்டு வரை இடம்பெற்று வரும் போராட்டத்திலேயே தனது பங்கு இருக்கிறது எனவும் 17ம், 19ம் திருத்தச் சட்டங்கள் ஊடாக அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் தரப்புடனேயே தான் தொடர்ந்தும் இயங்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment