தாமரை கோபுரம்: பொது மக்களை அனுமதிக்க மாதங்களாகும் - sonakar.com

Post Top Ad

Tuesday 24 September 2019

தாமரை கோபுரம்: பொது மக்களை அனுமதிக்க மாதங்களாகும்


கொழும்பு தாமரைக் கோபுரம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள போதிலும், பொது மக்கள் அதனைப் பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்க இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகலாமென, வேலைத்திட்ட இயக்குநர் அநுர குமார பேலி தெரிவித்துள்ளார். 



இதன் காரணமாக,  தாமரைக் கோபுரத்தைப்  பார்வையிட வருவதை, பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

கொழும்பு தாமரைக் கோபுரம், கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  திறந்து வைக்கப்பட்டது. இதனை ஓர் அரச நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 

எனினும், எந்த அரச நிறுவனத்தின் கீழ் இதனைக் கொண்டுவருவதென பிரச்சினை தோன்றியுள்ளது. அதற்கான செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதால், தற்போதைய சூழலில் தாமரைக் கோபுரத்தைப் பார்வையிடுவதற்கான அனுமதி, சாதாரண பொது  மக்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment