இன்னுமொரு 'தீவிரவாத' தாக்குதல் 'சதி': முசம்மிலுக்கு சந்தேகம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 15 September 2019

இன்னுமொரு 'தீவிரவாத' தாக்குதல் 'சதி': முசம்மிலுக்கு சந்தேகம்!


இன்னுமொரு தீவிரவாத தாக்குதலை நடாத்தி அதனூடாக ஜனாதிபதி தேர்தலை பின் தள்ளிப்போடுவதற்கான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார் விமல் வீரவன்சவின் பேச்சாளர் முசம்மில்.கடந்த காலங்களில் புலனாய்வுத்துறை அதிகாரிகளை கைது செய்ததன் ஊடாக உளவுத்துறை பலவீனப்படுத்தப்பட்டு, அதன் பின்னரே ஈஸ்டர் தாக்குதல் இட்பெற்றதாகவும் தற்போது கடற்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் இந்த சந்தேகத்தை உருவாக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சட்டங்களை சிச்கலாக்கியுள்ளதால் ஹிஸ்புல்லா போன்றோருக்கு வந்த பெருந்தொகை பணத்தைக் கூட விசாரித்து அறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் முசம்மில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment