போரா மாநாட்டை நடாத்தியமைக்கு ரணில் நன்றி தெரிவுப்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 13 September 2019

போரா மாநாட்டை நடாத்தியமைக்கு ரணில் நன்றி தெரிவுப்பு!


போஹ்ரா சமூகத்தினரின் உலகளாவிய மாநாட்டினை இலங்கையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு அச்சமூகத்தின் தலைவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய சரிவைக் கண்டிருந்த சந்தர்ப்பத்தில் இம்முடிவை எடுத்து இலங்கையில் இம்மாநாட்டை நடாத்தியமையின் பின்னணியில் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.

இதேவேளை, களுத்துறை பகுதியில் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த சில போராக்கள் அங்கு இனவாதத்துக்கு முகங்கொடுக்க நேர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment