Dr ஷாபிக்கு எதிராக ம.உ. ஆணைக்குழுவில் முறைப்பாடு! - sonakar.com

Post Top Ad

Thursday 8 August 2019

Dr ஷாபிக்கு எதிராக ம.உ. ஆணைக்குழுவில் முறைப்பாடு!


மருத்துவர் ஷாபி, குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சுக்கு எதிராக இன்று பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு ஒன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறையிட்டுள்ளது.



ஏனைய சில  முஸ்லிம் மருத்துவர்களையும் இதில் உள்ளடக்கியுள்ள முறைப்பாட்டாளர்கள் அனைவருமாக இணைந்து ஷாபியைக் காப்பாற்றும் நோக்கில் சாட்சியங்களை திசை திருப்ப முயல்வதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஷாபியின் வங்கிக் கணக்கில் அளவுக்கதிகமான பணம் இருப்பதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று முறைப்பாடொன்று பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment