சாய்ந்தமருது அல்- ஜலால் கட்டிட சர்ச்சைக்கு தீர்வு: ஹரீஸ் - sonakar.com

Post Top Ad

Wednesday 28 August 2019

சாய்ந்தமருது அல்- ஜலால் கட்டிட சர்ச்சைக்கு தீர்வு: ஹரீஸ்



சாய்ந்தமருது கமுஃகமுஃ அல்- ஜலால் வித்தியாலயதிற்காக கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி வேறு பிரதேச பாடசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பாரிய சர்ச்சை அண்மைக்காலமாக குறித்த பிரதேசத்தில் பரவலான பேசுபொருளாக மாறியிருந்தது. அந்த சர்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அதற்கான தீர்வு காணப்பட்டதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவிக்கிறார்.



சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய அதிபர் மற்றும் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோரின் வேண்டுகோளை அடுத்து பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் திரு. முத்துபண்டாவினை தொடர்பு கொண்டு விடுத்த பணிப்புரைக்கு அமைவாக அக்கட்டிடம் குறித்த பாடசாலையிலையே நிர்மாணிக்கப்படும் என கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் உறுதியளித்தார்.

அப்பாடசாலையின் பௌதீகவள அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இந்நிதியானது சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலயத்திலையே செலவிடப்பட உள்ளது.

இது குறித்து மக்கள் மற்றும் பெற்றோர்கள் குழம்பத் தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment