வடக்கு மக்கள் 'யோசித்து' வாக்களிக்க வேண்டும்: ரணில் - sonakar.com

Post Top Ad

Thursday 15 August 2019

வடக்கு மக்கள் 'யோசித்து' வாக்களிக்க வேண்டும்: ரணில்


யுத்தம் நிறைவு பெற்று ஐந்து வருடங்களாகியும் வடக்கில் எவ்வித அபிவிருத்தியையும் செய்யாது புறக்கணித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து எதை செய்யப் போகிறார்கள் என்பதை யோசித்தே வடக்கு மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்கிறார் ரணில் விக்கிரமசிங்க.

வவுனியாவின் அபிவிருத்திக்கு மாத்திரம் 20.5 பில்லியன் ரூபாவை தமது அரசு ஒதுக்கி செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் முன்னைய ஆட்சியாளர்கள் பிராந்தியத்தைப் புறக்கணித்திருந்தமையை யாரும் மறக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்ந்தும் இழுபறிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment