அவசர கால சட்ட நீக்கம்: கெஹலியவுக்கு சந்தேகம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 24 August 2019

அவசர கால சட்ட நீக்கம்: கெஹலியவுக்கு சந்தேகம்!


அவசர கால சட்டத்தை நீக்கியிருப்பது தீவிரவாதிகளுக்கு சுதந்திரமாக இயங்க அனுமதித்து நாட்டில் மீண்டும் பிரச்சினைகளை உருவாக்கிக் குளிர் காயும் அரசியல் நடவடிக்கையா? என சந்தேகம் வெளியிட்டுள்ளார் கெஹலிய ரம்புக்வல.



ஏப்ரல் 22ம் திகதி அமுலுக்கு வந்த அவசரகால சட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ள அதேவேளை குறித்த காலப்பகுதியில் பெருந்தொகையானோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்ததுடன் 200க்கும் அதிகமானோர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவித்து அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ளமை குறித்தே கெஹலிய இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து விரிவான கலந்துரையாடல் அவசியப்படுவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment